காபூலில் இருந்து கோடிக்கணக்கான பணத்தை அஷ்ரப் கனி எடுத்து சென்றதாக கூறப்படும் புகார் குறித்து விசாரிக்கப்படும் ; அமெரிக்கா

0 1499
காபூலில் இருந்து கோடிக்கணக்கான பணத்தை அஷ்ரப் கனி எடுத்து சென்றதாக கூறப்படும் புகார் குறித்து விசாரிக்கப்படும்

ஆப்கானில் இருந்து முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி கோடிக்கணக்கான டாலர்கள் பணத்தை எடுத்துச் சென்றுள்ளதாகக் கூறப்படுவது குறித்து விசாரிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

காபூலைத் தாலிபான்கள் கைப்பற்றியவுடன் மோதலைத் தவிர்க்க அஷ்ரப் கனி நாட்டைவிட்டுத் தப்பிச் சென்றபோது தன்னுடன் கோடிக்கணக்கான டாலர் பணத்தையும் எடுத்துச் சென்றுவிட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இது குறித்துப் பேசிய ஆப்கானிஸ்தான் மறுகட்டமைப்புக்கான அமெரிக்காவின் சிறப்பு ஆய்வாளர் ஜான் சாப்கோ, இந்தக் குற்றச்சாட்டுக் குறித்து நாடாளுமன்றத்தின், அரசு மறுசீரமைப்புக்கான குழு தன்னிடம் அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments