இந்தியாவில் தயாரிக்கப்பட்ட எஸ்-கிளாஸ் ரக கார்களை அறிமுகப்படுத்திய மெட்சிடிஸ் பென்ஸ்

0 2062
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட எஸ்-கிளாஸ் ரக கார்களை அறிமுகப்படுத்திய மெட்சிடிஸ் பென்ஸ்

இந்தியாவிலேயே CKD முறையில் தயாரிக்கப்பட்ட தங்களது எஸ்-கிளாஸ் ரக கார்களை மெட்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஸ்-கிளாஸ் எஸ் 450 4மேடிக் ரக கார்களுக்கு தொடக்க விலையாக ஒரு கோடியே 62 லட்சம் என்றும், எஸ்-கிளாஸ் எஸ் 350டி ரக கார்களுக்கு தொடக்க விலையாக ஒரு கோடியே 57 லட்ச ரூபாய் என்றும் மெட்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் நிர்ணயித்துள்ளது.

முழுமையாக தயாரித்து மற்றோரு நாட்டில் இறக்குமதி செய்து விற்கும் சிபியூ முறையிலேயே இதுவரை இந்தியாவில் எஸ்-கிளாஸ் ரக கார்கள் விற்கப்பட்டது. இந்நிலையில் தற்போதைய எஸ்-கிளாஸ் ரக கார்கள் மகாராஷ்டிராவின் புனேவில் உள்ள சாகன் ஆலையில் தயாரிக்கப்படுகிறது.

புதிதாக வடிவமைக்கப்பட்ட நேர்த்தியான முகப்பு எல்இடி விளக்கு, மேம்படுத்தபட்ட பாதுகாப்பு அமைப்புகள் என பல வசதிகள் புதிய ரக கார்களில் உள்ளதாக மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும்,பெட்ரோல் வகை மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தை 5 புள்ளி ஒரு விநாடிகளிலும், டீசல் ரக கார்கள் அதே வேகத்தை 6 புள்ளி 4 வினாடிகளிலும் எட்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments