முறைகேடு செய்த கூட்டுறவுச் சங்கத் தலைவரை இடைநீக்கம் செய்யும் அதிகாரம் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளருக்கு உண்டு ; சென்னை உயர் நீதிமன்றம்

0 1102
முறைகேடு செய்த கூட்டுறவுச் சங்கத் தலைவரை இடைநீக்கம் செய்யும் அதிகாரம் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளருக்கு உண்டு

கூட்டுறவுச் சங்கத் தலைவர், துணைத் தலைவர் ஆகியோர் முறைகேடு செய்தால், அவர்களை இடைநீக்கம் செய்யக் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளருக்கு அதிகாரம் உண்டு எனச் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

முறைகேடு செய்பவர்களை இடைநீக்கம் செய்யக் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளருக்கு அதிகாரம் வழங்கும் சட்டத் திருத்தத்தை ரத்து செய்யக் கோரித் தொடுத்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டோரை அரசு அதிகாரிகள் இடைநீக்கம் செய்ய முடியாது என மனுதாரரின் வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

முறைகேடுகளால் கூட்டுறவுச் சங்கங்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்கவே சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கூட்டுறவுச் சங்கத்தில் பதவி ஏற்போர் அதன் சட்ட விதிகளுக்குக் கட்டுப்பட வேண்டும் எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments