சூடான சாம்பார் கொட்டியதில் ஒன்றரை வயது பெண் குழந்தை பலி

0 1442
சூடான சாம்பார் கொட்டியதில் ஒன்றரை வயது பெண் குழந்தை பலி

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே, சூடான சாம்பார் மேலே கொட்டியதில் ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாழநல்லூரை சேர்ந்த விவசாயி மணிகண்டனின் மனைவி தனலட்சுமி, கடந்த மாதம் அவர்களது வயலில் வேலை செய்யும் ஆட்களுக்கும் சேர்த்து மதிய உணவு தயார் செய்து வைத்திருந்தார்.

அப்போது, சமையலறைக்குள் சென்ற அவர்களது ஒன்றரை வயது மகள் கிருபாஸ்ரீ, தவறுதலாக சாம்பார் வாளியை தள்ளிவிட்டதில், குழந்தை மீது சூடான சாம்பார் கொட்டியதாக கூறப்படுகிறது.

இதில் படுகாயமடைந்த குழந்தை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments