மாஞ்சா நூலில் சிக்கி ஒரு மணி நேரத்துக்கு மேலாக போராடிய காக்கை-பத்திரமாக மீட்டு தண்ணீர் கொடுத்து பறக்கவிட்ட தீயணைப்பு வீரர்கள்

0 2019

சென்னை சாலிகிராமத்தில் மாஞ்சா நூலில் சிக்கி ஒரு மணி நேரத்துக்கு மேலாக போராடி கொண்டிருந்த காக்கையை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

தசரதபுரத்தில் இரண்டு மரங்களுக்கு இடையே காக்கை ஒன்று மாஞ்சா நூலில் சிக்கி நீண்ட நேரமாக போராடிக்கொண்டிருந்தது.

இதுகுறித்து அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்ற நபர் கோயம்பேடு தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் காக்கையை பிடித்து மாஞ்சா நூலை அவிழ்த்து பின்னர் தண்ணீர் கொடுத்து அதனை பறக்கவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments