உ.பி.யில் சுற்றுலா பேருந்தும் மணல் லாரியும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து-9 பேர் பலி, 27 பேர் படுகாயம்

0 1796
உத்திரபிரதேசத்தில் சுற்றுலா பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.

உத்திரபிரதேசத்தில் சுற்றுலா பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.

பரபான்கி (Barabanki) மாவட்டத்தின் Kisan Path Baburi பகுதியில் டெல்லியிலிருந்து உத்திரபிரதேசத்தின் Bahraich நோக்கி சென்ற பேருந்து அதிகாலையில் எதிரே மணல் ஏற்றி வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் 27 பேர் படுகாயமடைந்தனர்.

சாலையில் நுழைந்த மாடு மீது மோதாமல் இருக்க ஓட்டுனர் லாரியை எதிர்திசையில் வாகனங்கள் செல்லும் சாலை பக்கம் செலுத்தியதாகவும், அப்போது எதிரே வேகமாக வந்த பேருந்து மீது மோதியதாகவும் கூறப்படுகிறது.

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும் காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments