நடிகர் சூரி இல்ல திருமண விழா திருடனுக்கு நீதிமன்றத்தில் நீதிபதி செய்த தரமான சம்பவம்

0 7245

நடிகர் சூரியின் சகோதரர் இல்ல திருமண விழாவில் நகைத் திருடியவர் ஜாமீன் கோரிய வழக்கில், ஏதேனும் ஒரு நகைக்கடை அதிபர் உறுதி மொழிப்பத்திரம் தந்தால், ஜாமீன் வழங்குவது பற்றி பரிசீலிக்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நிபந்தனை விதித்துள்ளது.

மதுரையில் நடந்த திருமண நிகழ்ச்சியில் 10 சவரன் நகையை திருடிய புகாரில் விக்னேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் ஜாமீன் கோரி விக்னேஷ் தொடர்ந்த மனு மீதான விசாரணையின்போது, அவர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட மாட்டார் என்ற உறுதிமொழி பத்திரத்தை தாக்கல் செய்வதாக அவரது தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதனை ஏற்க மறுத்த உயர்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி, நகைக்கடை அதிபரோ, முக்கிய பிரமுகரோ உறுதிமொழி பத்திரம் வழங்கினால் ஜாமீன் வழங்க பரிசீலிப்பதாகக் கூறி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments