நெடுஞ்சாலைகளில் உள்ள சிலைகளை 3 மாதங்களில் அகற்ற வேண்டும்-அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

0 2654

தமிழகம் முழுவதும் பொது இடங்கள், அரசு நிலங்கள், மேய்கால் புறம்போக்கு, நெடுஞ்சாலைகளில் உள்ள சிலைகளை 3 மாதங்களில் அடையாளம் கண்டு அகற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பொதுமக்கள் உரிமைகளை பாதிக்காத வகையில்  சிலைகள் மற்றும் கட்டுமானங்களை அமைக்க அனுமதி வழங்குவது தொடர்பாக விரிவான விதிகளை வகுக்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தலைவர் பூங்கா என உருவாக்கி, சாலைகள் மற்றும் பொது இடங்களில் இருக்கும் தலைவர் சிலைகளை அந்த பூங்காவில் வைத்து பாரமரிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, சிலைகளை பராமரிப்பதற்கான செலவுகளை சிலை வைக்க அனுமதி பெற்றவர்களிடம் வசூலிக்க உத்தரவிட்டார்.

சிலைகள் தாக்கப்பட்டு சட்ட ஒழுங்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்ட நீதிபதி, தலைவர்கள் பிறந்தநாள், நினைவு நாள் நேரங்களில் நடைபெறும் நிகழ்வுகளால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments