லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக இதுவரை எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்? அறிக்கை தாக்கல் செய்ய உ.பி அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

0 1760

லக்கிம்பூர் வன்முறை வழக்கில் எஃப்ஐஆரில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு விட்டனரா என கேள்வி எழுப்பியுள்ள உச்சநீதிமன்றம், அதுகுறித்த நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரபிரதேச அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

லக்கிம்பூரில் விவசாயிகள் கார் ஏற்றிக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், உத்தரப்பிரதேசத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு, மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா உள்ளிட்டோர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகள் மீது கார் ஏற்றப்படுவது போன்ற வீடியோக்களும் வெளியாகின. ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில், உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ள இந்த வழக்கு தலைமை நீதிபதி ரமணா அமர்வில் விசாரணைக்கு வந்தது.

இந்த விவகாரம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த உத்தரப்பிரதேச அரசு, ஒரு நபர் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments