பாகிஸ்தான் ராணுவத் தளபதி கமர் ஜாவேத் பஜ்வா 2022 நவம்பரில் ஓய்வு..!

0 2016

பாகிஸ்தான் ராணுவத் தளபதி கமர் ஜாவேத் பஜ்வாவின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு நவம்பரில் முடிவடைய உள்ள நிலையில், புதிய தளபதியாக ஐஎஸ்ஐயின் முன்னாள் தலைவர் பைஸ் ஹமீது நியமிக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது.

பாகிஸ்தான் ராணுவத் தளபதியாக நியமிக்கப்படுபவர் பெசாவர் படைப்பிரிவின் கமாண்டராகக் குறைந்தது ஓராண்டுக்காலம் பணியாற்றியிருக்க வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயின் முன்னாள் தலைமை இயக்குநர் பைஸ் ஹமீது பெஷாவர் படைப்பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் ஆப்கன் பாதுகாப்பு அமைச்சர் முல்லா யாகூப், உள்துறை அமைச்சர் சிராஜுதீன் ஹக்கானி உள்ளிட்ட தாலிபான் தலைவர்களை நேரடியாக அணுகக் கூடியவர் எனக் கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments