அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வின் காரை திருடிய இருவர் கைது..!

0 2107

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வின் காரை திருடிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த முன்னாள்  எம்.எல்.ஏ.சின்னச்சாமியின் இன்னோவா கார் கடந்த மாதம் திருடு போனதாக அவர் போலீசில் புகார் அளித்திருந்தார். அதேநாளில் அப்பகுதியில், 3 பைக்குகள், 4 செல்போன்கள், ஒரு லேப்டாப் திருடு போனதாகவும் வெவ்வேறு புகார்கள் அளிக்கப்பட்டிருந்தன.

இதனையடுத்து திருடப்பட்ட செல்போன் சிக்னலை வைத்து நடத்தப்பட்ட விசாரணையில், அந்த செல்போன் திண்டுக்கலில் விற்கப்பட்டதும், 6 பேர் கொண்ட கும்பல், காரை திருடியதும் தெரியவந்தது. தலைமறைவாக உள்ள 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments