விதி மீறி செயல்பட்ட 3,000 பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் மூடல் - அமைச்சர் மெய்யநாதன்..!

0 1533

தமிழகத்தில் விதிகளை மீறி செயல்பட்ட 3 ஆயிரம் பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அடுத்த ஆண்டிற்குள் பிளாஸ்டிக்கை முழுமையாக தடை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என குறிப்பிட்டார்.

மேலும்சட்டவிரோத சாயப்பட்டறைக் கழிவுகளை கண்காணிக்க குழு அமைக்கப்படும் என தெரிவித்த அமைச்சர், ஈரோடு, உள்ளிட்ட மாவட்டங்களில் பொது சுத்திகரிப்பு மையம் அமைக்கப்படும் என்றும் பேசினார்.

வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தோல் தொழிற்சாலைகளில் இருந்து வரும் 9 லட்சம் டன் அபாயக் கழிவுகள் உள்ளதாகவும், அதை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments