துப்பாக்கி முனையில் ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டிய இலங்கை கடற்படை..!

0 1231

ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் விரட்டியடித்துள்ளனர்.

10க்கும் அதிகமான ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் மீன்பிடிக்க விடாமல் துப்பாக்கியை காட்டி விரட்டியடித்துடன், வானத்தில் சிவப்பு பட்டாசுகளை வெடித்து எச்சரித்ததாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.மேலும், பாட்டில்களை வீசி இலங்கை கடற்படைதாக்குல் நடத்தியதாக தெரிவித்த மீனவர்கள், படகுகளில் உடைந்து கிடந்த கண்ணாடித் துண்டுகள், பாட்டில்களையும் காட்டினர்.

இலங்கை கடற்படையினர் அச்சுறுத்தல் மற்றும் தாக்குதலால், மீன் பிடிக்க முடியாமல் நஷ்டத்துடன் கரை திரும்பியதாகவும் மீனவர்கள் கூறினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments