ஆயுத பூஜை - சென்னையில் 3 பேருந்து நிலையங்களிலிருந்து இருந்து வெளியூர்களுக்கு பேருந்துகள் இயக்கம்

0 2156

ஆயுதபூஜையை முன்னிட்டு, வெளியூர் செல்லும் பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, சென்னையில் 3 பேருந்து நிலையங்களிலிருந்து வரும்  12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரானா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதற்காக, தீபாவளி, பொங்கலின் போது இயக்கப்படுவது போன்று, சென்னையில் 3 பேருந்து நிலையங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

கோயம்பேடு பேருந்து நிலையம் தவிர்த்து, தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையத்தில் இருந்தும், பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்தும் வரும்  12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பேருந்துகள் வெளியூர்களுக்கு இயக்கப்படுகின்றன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments