பிரியாணி கடையில் கத்தியைக் காட்டி மிரட்டி மாமூல் கேட்ட ரவுடிகள் - சிசிடிவி காட்சியால் பிடிபட்டனர்...!

0 5635

சென்னை அம்பத்தூரில் உள்ள ஒரு பிரியாணி கடையில் நுழைந்த ரவுடிகள் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜக்கம்மா பிரியாணி கடைக்குள் 4 ரவுடிகள்  கத்தியை காட்டி மிரட்டி மாமூல் கேட்டு உள்ளனர்.  இந்த காட்சி கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது.இதுகுறித்து கடையின் உரிமையாளர் விஜய் ஆனந்த் உடனடியாக காவல் நிலையத்திற்கு செல்போன் மூலம் தகவல் அளித்தார்.

போலீசார் தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்த நான்கு பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர்.  விசாரணையில் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது ஐசிஎப் காலனியைச் சேர்ந்த  தினேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் மூவர்  என்பதும் தெரியவந்தது.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments