தண்டையார்ப்பேட்டை தொழிற்சாலையில் பயங்கரத் தீ விபத்து..!

0 1330

சென்னை தண்டையார்பேட்டையில் தனியார் தொழிற்சாலையில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

எண்ணூர் நெடுஞ்சாலை உள்ள பரமேஸ்வரர் நகரில் தனியாருக்கு சொந்தமான தின்னர் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது, இந்நிலையில் நேற்று இரவு சுமார் 11.30 மணியளவில் ஆலையிலிருந்து கரும் புகை மூட்டத்துடன் தீ வெளியாவதை கண்ட அப்பகுதி மக்கள் காவல்துறைக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

7 வாகனங்களில் 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்..சுமார் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததால் உயிர்ச்சேதம், பெருமளவிலான பொருள் சேதம் தவிர்க்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments