சில்வர் குடத்திற்குள் தலையை விட்டு சிக்கி கொண்ட நாய்... படாதபாடுபட்டு மீட்ட தீயணைப்புத்துறையினர்

0 2626

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சில்வர் குடத்திற்குள் சிக்கி கொண்ட நாயின் தலையை தீயணைப்புத்துறையினர் படாதபாடுபட்டு மீட்டனர்.

சீகம்பட்டியில் சாலையில் சுற்றி திரிந்த நாய் ஒன்று பழைய பாட்டிலை கழுவும் நிறுவனம் முன்பு இருந்த சில்வர் குடத்திற்குள் தலையை விட்டது. தண்ணீர் குடிக்க முயன்று தலையை விட்டு மாட்டிக் கொண்ட அந்த நாய் தலயை வெளியே எடுக்க முடியாமல் குடத்துடன் அங்கும் இங்குமாக ஓடியது.

இதுபற்றி அந்த பகுதி மக்கள் மணப்பாறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் குடத்தில் சிக்கிய நாயின் தலையை லாவகமாக வெளியில் எடுத்து மீட்டனர். இதனை அடுத்து அந்த நாய் மின்னல் வேகத்தில் அங்கிருந்து ஓடியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments