அருளும் அமைதியும் வழங்கும் நவராத்திரி திருவிழா -கோலாகலம்

0 1223
அருளும் அமைதியும் வழங்கும் நவராத்திரி திருவிழா -கோலாகலம்

நாடு முழுவதும் நவராத்திரி திருவிழா இன்று முதல் தொடங்கியது. ஒன்பது நாட்களுக்கு நவராத்திரி கொண்டாடப்பட்டு பத்தாவது நாள் தசரா கொண்டாடப்படுகிறது.

கொரோனா காலக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் பண்டிகைக் காலம் இந்த ஆண்டு களை கட்டியுள்ளது. செல்வம், வீரம், ஞானம் வழங்கும் அலைமகள், மலைமகள், கலைமகள் என மூன்று பெண் தெய்வங்களின் வழிபாட்டை மேற்கொள்ளும் நவராத்திரிப் பண்டிகை நள்ளிரவு தொடங்கியது. பக்தர்கள் 9 நாட்கள் எரியும் அணையா விளக்கை ஏற்றி வைத்து வழிபாடுகளை மேற்கொண்டு ஆடிப்பாடிக் கொண்டாடினர்

ஜம்மு காஷ்மீரில் கட்ரா மலைமீது உள்ள வைஷ்ணவோ தேவி ஆலயம் பல்வேறு நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட பலவண்ண வாச மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

கொல்கத்தாவில் உள்ள துர்க்கை அம்மனுக்கு தங்கத்தால் ஆன அழகிய வடிவமைப்பு மிக்க சேலை சாத்தப்பட்டது. அம்மன் சிலையையும் பக்தர்கள் தங்கத்தால் அலங்கரித்து மகிழ்ந்தனர். அலங்கரிக்கப்பட்ட பந்தலில் அம்மன் தங்கவிழிகளால் நோக்கி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சேலைக்கு சுமார் ஒன்றரை லட்சம் மதிப்புடைய ஆறு கிராம் தங்கம் பயன்படுத்தப்பட்டது. சிலையின் கண்களுக்கு பத்து கிராம் தங்கம் பயன்படுத்தப்பட்டது என்று கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments