பாகிஸ்தானில் நிலநடுக்கம்... 20 பேர் உயிரிழந்ததாக தகவல்

0 1549
பாகிஸ்தானில் நிலநடுக்கம்... 20 பேர் உயிரிழந்ததாக தகவல்

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 20 பேர் உயிரிழந்ததாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகாலை 3.30 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளிகளாகப் ஆகப் பதிவாகியது. இரவில் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது கூரைகளும் சுவர்களும் இடிந்து விழுந்தன. இதில் ஒரு பெண், ஆறு குழந்தைகள் உள்பட பலர் உயிரிழந்தனர்.

200க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி காயம் அடைந்துள்ளனர். இதனால் உயிரிழப்பின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments