வீச்சரிவாள் புள்ளிங்கோஸுக்கு..!காலிலும் கையிலும் மாவுக்கட்டு..!

0 2446
வீச்சரிவாள் புள்ளிங்கோஸுக்கு..!காலிலும் கையிலும் மாவுக்கட்டு..!

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் மருத்துவமனைக்குள் புகுந்து பெண்ணிடம் அரிவளை காண்பித்து மாத்திரை திருடிய இரு புள்ளீங்கோ பாய்ஸ் போலீசிடம் இருந்து தப்பி ஓடும் போது தவறி விழுந்ததால் கை மற்றும் கால் முறிந்ததால் மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை கடைவீதி சாலையில் இயங்கி வரும் கனகேச தேவர் மருத்துவமனை மருந்துக் கடைக்கு வந்த இரு இளைஞர்கள் பணியில் இருந்த பெண்ணிடம் தூக்க மாத்திரை கேட்டதாக கூறப்படுகிறது. மருத்துவர் பரிந்துரை சீட்டு இல்லாமல் தூக்க மாத்திரை தரமாட்டேன் என அந்த பெண் கூறியதாக சொல்லப்படுகிறது.

ஆடையில் மறைத்து வைத்து இருந்த அருவாளை எடுத்து மருந்துக் கடையில் இருந்த பணி பெண்ணை தாக்க முயற்சித்து மிரட்டி மேஜை மீது இருந்த தூக்கமாத்திரையை திருடி கொண்டு ஒட தொடங்கினார்கள். அப்போது பக்கத்து கடையில் இருந்த வந்த ஒருவர் இருவரையும் பிடிக்க முயலும்போது அவரையும் அரிவாளை காட்டி மிரட்டி தப்பினர்.

பட்டுக் கோட்டை காவல்துறையினர் சிசிடிவி யில் பதிவாகி இருந்த காட்சியின் அடிப்படையில் பன்னை வயல் கிராமத்தை சேர்ந்த 20 வயதான ஹரிஹன். பட்டுக் கோட்டையை சேர்ந்த 19 வயதான ராஜேஸ் ஆகிய இரண்டு பேரையும் இரண்டு மணி நேரத்திற்குள் பிடித்து கைது செய்தனர். துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை பிடித்த காவல்துறையினரை தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவாளி பிரியா பாராட்டினார்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட ஹரிஹரனும், ராஜேசும் போலீசாரிடம் இருந்து தப்பிச்செல்லும் நோக்கில் தாவிக்குதித்து ஓடும் போது வழுக்கி விழுந்து இருவருக்கு வலது காலும், மற்றொருவருக்கும் வலது கையும் உடைந்து போனதாகவும் அவர்களை மீட்டு மனிதாபிமானத்துடன் மாவுக்கட்டு போட்டு விட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கொலை கொள்ளை சம்பவங்களை தடுக்கும் பொருட்டு போலீசார் ரவுடிகளை கைது செய்து சிறையில் அடைத்து வரும் நிலையில், அதில் இருந்து தப்பும் பதின் பருவ இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி குற்றசெயல்களில் ஈடுபட்டுவருகின்றனர். தப்ப நினைத்து தாவிக்குதித்தால் வழுக்கி விழுந்து, மாவுக்கட்டு போட்டு விடும் அத்தியாயத்தை போலீசார் மீண்டும் தொடங்கி வைத்து இருப்பதால் சில்லறை களவானீஸ்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments