கராத்தே தெரியும் போல.. ஏமாற்றிய மன்மதனை ஏறிமிதித்த சிங்கப் பெண்.!

0 4164

சென்னையில் மேட்ரிமோனியல் மூலம் பழகி திருமணம் செய்வதாக ஏமாற்றி பணத்தை பறித்த நபரை , உறவினர்களுடன் சேர்ந்து இளம்பெண் அடித்து உதைத்த வீடியோ வெளியாகி உள்ளது. ஏமாற்றிய ஆசாமியை ஏறி மிதத்த சிங்கப்பெண் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

மேட்ரிமோனியல் இணையதளம் மூலம் அறிமுகமாகி பெண்களை ஏமாற்றி கையும் களவுமாக சிக்கிய மாப்பிள்ளைக்கு இரு பெண்கள் அடி விருந்து வைத்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி இருக்கின்றது

சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் தனியார் ஹோட்டலில் பணியாற்றி வரும் திருச்சியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு, மேட்ரிமோனியல் இணையதளம் மூலம் அறிமுகமானவர் கோகுல கிருஷ்ணன். திருமணம் செய்வதாக கூறி பழகியுள்ளார். கோகுல் கிருஷ்ணனின் பேச்சில் மயங்கிய அந்தப்பெண்ணும் அவரது பேச்சைக்கேட்டு வீடியோ காலில் எல்லைமீறி தோன்றியதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் இளம்பெண்ணிடம் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட கோகுலகிருஷ்ணன் அவரிடம் இருந்து அவசர தேவை என்று நடித்து ரூ. 1லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றதாக கூறப்படுகின்றது.

பின்னர், அந்த இளம் பெண்ணுக்கு வேறொரு நபருடன் தொடர்பிருப்பதாகத் கூறி அவரை விட்டு எஸ்கேப் ஆகியுள்ளார். இதே போல மற்றொரு பெண்ணிடம் பழகி 30 சவரன் நகைகளை வாங்கிக் கொண்டு கம்பி நீட்டியதாக கூறப்படுகின்றது. பணத்தை இழந்த அந்த இளம் பெண் கோகுல கிருஷ்ணனிடம் நைசாக பேசி ஜாபர்கான் பேட்டை முனுசாமி தெருவில் தன்னுடையை உறவினர் வீட்டுக்கு விருந்துக்கு வருமாறு அழைத்துள்ளார்.

அங்கு வந்த கோகுல கிருஷ்ணனிடம் தனது பணத்தை திருப்பிக்கேட்ட போது இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. அப்போது, ஏற்பட்ட தகராறில் இளம் பெண்ணின் ஆடை கிழிந்ததால் ஆத்திரமடைந்த அந்த இளம்பெண்ணும், அவரின் உறவினர்களும், நண்பர்களும் கோகுல கிருஷ்ணனை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

வாயில் ரத்தம் வர அந்த இளம் பெண்ணிடம் சிக்கிய கோகுல கிருஷ்ணனை ஏறி மிதித்து தனது ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டதோடு அதனை வீடியோவாகவும், பதிவு செய்துள்ளார்.

ஒரு கட்டத்தில் துடைப்பத்தால் வெளுத்ததோடு, செருப்பாலும் அடித்து நொருக்கியுள்ளனர். உறவினர்கள், அங்கு அடி இங்கு அடி என்று இளம் பெண்ணுக்கு சொல்லிக் கொடுக்க, அந்த இளம் பெண்ணும் வாலிபரை சளைக்காமல் அடித்து துவைத்து எடுத்தார்.

கிண்டி காவல் நிலையத்தில் கோகுல கிருஷ்ணனை ஒப்படைத்த நிலையில், ரத்தக் காயம் ஏற்பட்ட கோகுல கிருஷ்ணனை சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

இளம்பெண் தன்னை பொய் கூறி வரவழைத்து நண்பர்களுடன் சேர்ந்து தாக்கியதாக கோகுல கிருஷ்ணன் குமரன் நகர் காவல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக இளம்பெண் உள்பட 3 பேரை கைது செய்து குமரன் நகர் போலீசார் காவல் நிலைய ஜாமீனில் விடுவித்ததாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் இளம் பெண்ணும் அவரின் உறவினர்களும் கோகுல கிருஷ்ணனை பந்தாடும் பரபரப்பு வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments