பேருந்தின் முன்பக்க சக்கரத்தில் சிக்கி இழுத்து செல்லப்பட்ட வாகன ஓட்டி-அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

0 2853

கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறியில் இருசக்கர வாகன ஓட்டி மீது அரசுப் பேருந்து மோதிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

வீயன்னூர் பகுதியை சேர்ந்த சிவகுமார், தனது இருசக்கர வாகனத்தில் இடது பக்க சாலையோரமிருந்து சாலையை கடப்பதற்காக திடீரென வலது பக்கமாக திரும்பிய போது போது, நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மோதியது. இந்த விபத்தில் பேருந்தின் முன்பக்க சக்கரத்தில் சிக்கிய அந்த நபர், சில அடி தூரம் இருசக்கர வாகனத்துடன் இழுத்து செல்லப்பட்டார்.

ஹெல்மட் கழன்று தெறித்த பின்பும் சிவகுமார் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார். காயமடைந்த அவர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், இரணியல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments