விவசாயிகளின் குடும்பத்தினரைச் சந்திக்க லக்கிம்பூருக்கு ராகுல்காந்தி பயணம்

0 2787
விவசாயிகளின் குடும்பத்தினரைச் சந்திக்க லக்கிம்பூருக்கு ராகுல்காந்தி பயணம்

லக்கிம்பூரில் கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரைச் சந்திக்க காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் 5 பேர் லக்னோவில் இருந்து காரில் புறப்பட்டுச் சென்றனர்.

ராகுல்காந்தி, சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஸ் பாகல், பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சிங் ஆகியோர் டெல்லியில் இருந்து லக்னோவுக்கு விமானத்தில் வந்தனர். சொந்த வாகனத்தில் செல்லக் காவல்துறையினர் அனுமதிக்காததைக் கண்டித்து விமான நிலையத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல்காந்தி சரமாரியாக வினா எழுப்பினார்.

நீண்ட வாக்குவாதத்துக்குப் பின் காவல்துறையினர் அனுமதித்ததால் ராகுல்காந்தி தனது காரில் புறப்பட்டு சீதாப்பூரில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட தனது தங்கை பிரியங்காவைக் காணச் சென்றார். அவரையும் அழைத்துக் கொண்டு லக்கிம்பூர் நோக்கிப் புறப்பட்டுச் சென்றார்.

கொல்லப்பட்ட விவசாயிகள், செய்தியாளர் ஆகியோரின் குடும்பத்தினருக்குப் பஞ்சாப் அரசின் சார்பில் தலா 50 இலட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் சரண்ஜித் சிங் அறிவித்துள்ளார். இதேபோல் சத்தீஸ்கர் அரசின் சார்பில் தலா 50 லட்ச ரூபாய் வழங்குவதாக முதலமைச்சர் பூபேஸ் பாகல் அறிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments