மத்தியப் பிரதேசத்தில் 1.7 இலட்சம் குடும்பங்களுக்கு இ சொத்து அட்டை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர்

0 1747
மத்தியப் பிரதேசத்தில் 1.7 இலட்சம் குடும்பங்களுக்கு இ சொத்து அட்டை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர்

மத்தியப் பிரதேசத்தில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் குடும்பங்களுக்கு இ சொத்து அட்டைகளை வழங்கும் திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார்.

ஊர்ப்புறங்களில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் நிலங்கள், கட்டடங்களை அளவிட்டு அவற்றின் உரிமையாளர்களுக்கு மின்னணுச் சொத்து அட்டை வழங்கும் திட்டம் ஸ்வமித்வா என அழைக்கப்படுகிறது.

இத்திட்டத்தில் மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் 22 லட்சம் குடும்பங்களுக்குச் சொத்து அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

மத்தியப் பிரதேசத்தில் மூவாயிரம் ஊர்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 70 ஆயிரம் குடும்பங்களுக்குச் சொத்து அட்டை வழங்கலைத் தொடங்கி வைத்த பிரதமர் மோடி, பயனாளிகளுடன் காணொலியில் கலந்துரையாடினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments