தொழிற்சாலையில் துப்பாக்கியை சோதனை செய்து பார்த்துக் கொண்டிருந்த போது விபரீதம்..!

0 3414

திருச்சி திருவெறும்பூர் துப்பாக்கி தொழிற்சாலையில் துப்பாக்கியை சோதனை செய்து பார்த்த போது, குண்டு வெடித்து ஊழியர்கள் இருவர் காயமடைந்தனர்.

திருவெறும்பூரில் இயங்கி வரும் துப்பாக்கி தொழிற்சாலையில் AMR என்ற நவீன ரக துப்பாக்கியை அழகேசன் என்ற ஊழியரும், பிரகாஷ் என்பவரும் சோதனை செய்து பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென குண்டு துப்பாக்கியிலேயே வெடித்ததால் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

வழக்கமாக சோதனையில் ஈடுபடும் ஊழியர்கள் Bullet proof உடையை அணிந்து சோதனை மேற்கொள்வது வழக்கம். ஆனால், அவர்கள் இருவரும் bullet proof உடையை அணியாததால் காயம் ஏற்பட்டுள்ளது.

துப்பாக்கியில் இருந்து குண்டை உந்தி தள்ளும் போது குழலில் இருக்கும் வாயு சரியாக வெளியாகததால் குண்டு துப்பாக்கியிலேயே வெடித்ததாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments