திறப்பு விழா சலுகையாக 6 ரூபாய்க்கு துணி விற்பனை.. அலைமோதிய மக்கள் கூட்டம்.. அபராதம் விதித்த அதிகாரிகள்..!

0 2720
திறப்பு விழா சலுகையாக 6 ரூபாய்க்கு துணி விற்பனை.. அலைமோதிய மக்கள் கூட்டம்.. அபராதம் விதித்த அதிகாரிகள்..!

மதுரையில், தனியார் துணி கடையில் 6 ரூபாய்க்கு துணி விற்பனை என அறிவிக்கப்பட்டதால் அங்கு மக்கள் கூட்டம் அலைமோதியது.

எஸ்.எஸ்.காலனி பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட துணி கடையில், திறப்பு விழா சலுகையாக இன்று ஒருநாள் 6 ரூபாய்க்கு துணி விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.  அதையொட்டி, ஏராளமான பொதுமக்கள் அங்கு குவிந்தனர்.

கொரோனா தடுப்பு விதிகளை மீறி ஒரே இடத்தில் ஏராளமானோர் குவிந்ததால் அங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள், கடை உரிமையாளருக்கு அபராதம் விதித்து தள்ளுபடி அறிவிப்பை ரத்து செய்ய உத்தரவிட்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments