9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு

0 2409
காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரையில் வாக்குப்பதிவு நடைபெற்றது

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் காத்திருந்து வாக்குகளை செலுத்தினர். 

முதற்கட்டமாக 39 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 78 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 755 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 1,577 கிராம ஊராட்சி தலைவர், 12,252 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு இன்று தேர்தல் நடைபெற்றது.

இதற்காக 7,921 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. வாக்குப்பதிவை முன்னிட்டு வாக்குச்சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

கடைசி ஒருமணி நேரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களும், அதற்கான அறிகுறி உள்ளவர்களும் வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments