கர்நாடகாவில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு விதித்த தடை அமலுக்கு வந்தது

0 2568

கர்நாடகாவில், பணம் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ள பந்தயம் கட்டி விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு விதிக்கப்பட்ட தடை அமலுக்கு வந்துள்ளது.

ஆன்லைன் விளையாட்டுகளில் பணத்தை இழந்த பலர் தவறான முடிவுகள் எடுப்பது அதிகரித்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவை மீறினால் அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது. இதனால் எம்பிஎல் உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டு செயலிகளை பயனாளர்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கர்நாடக அரசின் இந்த தடையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர, ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களிலும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments