2025-க்குள் தைவான் மீது சீனா முழுமையாக படையெடுக்கும்..!

0 2872

2025-ஆம் ஆண்டுக்குள் தைவான் மீது சீனா முழுமையாக படையெடுக்கும் என தைவான் ராணுவ அமைச்சர் அச்சம் தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி 4 நாட்களில் சுமார் 150 முறை சீன போர் விமானங்கள் தைவானின் வான் எல்லைக்குள் அத்துமீறி பறந்ததாக கூறிய ராணுவ அமைச்சர்  சியூ குவோ செங் , கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவில் சீனாவுடன் பதற்றமான சூழல் நிலவுவதாக தெரிவித்துள்ளார்.

தைவான், சீனாவுக்கு உட்பட்ட பகுதி எனவும், தேவைப்பட்டால் பலத்தை பயன்படுத்தி கைபற்றப்படும் எனவும் சீனா தொடர்ந்து சொல்லிவரும் நிலையில், தங்கள் சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் பறிகொடுக்க போவதில்லை என தைவான் கூறி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments