அரிய வகை நோயால் உயிருக்கு போராடும் பெண் குழந்தை...சிகிச்சைக்கான செலவை தமிழக அரசே ஏற்கும் -அமைச்சர் மா.சுப்பிரமணியன்

0 2038

அரிய வகை மரபணு ரத்தம் உறைதல் குறைபாடு ஏற்பட்டு உயிருக்கு போராடும் குழந்தையின் சிகிச்சைக்கான செலவை தமிழக அரசே ஏற்கும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதியளித்துள்ளார்.

சென்னை அடுத்த அம்பத்தூரை சேர்ந்த 8 மாத குழந்தை தியாயினிக்கு, கடந்த மாதம் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில்  நடத்தப்பட்ட பரிசோதனையில் குழந்தைக்கு மரபணு ரத்த உறைதல் குறைபாடு இருப்பதாக தெரிவித்த மருத்துவர்கள், அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.

அதன் பின்னரும் குழந்தைக்கு ரத்த கசிவு ஏற்படுவதுடன், தலையின் பின் பகுதி வீக்கமடைந்து, உடலில் அலர்ஜி ஏற்பட்டுள்ளதாக அதன் தந்தை வேதனையுடன் தெரிவித்துள்ளார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments