ஃபேஷன் அணிவகுப்பில் பூமியை காக்க கோரி பேனர் ஏந்தி வந்த பெண்...!

0 1398

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடந்த ஃபேஷன் அணிவகுப்பில் மாடல்களின் வரிசையில் பூமியை காக்க வலியுறுத்தி பெண் ஒருவர் பேனர் ஏந்தி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

லூயீ வுட்டான் ஃபேஷன் நிகழ்ச்சி அணிவகுப்பில் "எல்லை மீறிய நுகர்வு பூமிக்கு அழிவு" என்ற பேனரை ஏந்தி மாடல் அழகிகளுடன் பெண் ஒருவர் நடந்து வந்தார்.

அனுமதி இல்லாமல் நுழைந்த அவரை கவனித்த பாதுகாவலர்கள் அவரை தரையில் தள்ளி வெளியே தூக்கிச் சென்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments