ஆஸ்திரேலியாவில் கடல் வாழ் உயிரினங்களை காக்க விஞ்ஞானிகள் முயற்சி...கான்கிரீட் பேனல்கள் பொருத்தி உயிரினங்கள் வாழ ஏற்பாடு

0 1674

ஆஸ்திரேலியாவின் சிட்னி Harbour Bridge கடற்கரை பகுதியில் கடல் உயிரனங்கள் வாழும் வகையில் பல செயற்கை கான்கிரீட் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன.

கடல் வாழ் நுண்ணூயிரிகள், கடற்பாசிகள், சிறிய மீன்கள் உள்ளிட்டவற்றின் இருப்பிடங்களை கரையோரங்களில் அதிகரிக்கும் நோக்கில் 20 ஆண்டுகள் வரை நிலைக்கும் வகையில் இந்த பிரத்தியேக பேனல்களை விஞ்ஞானிகள் வடிவமைத்து பொருத்தியுள்ளனர்.

உயர்ந்து வரும் கடல் மட்டம், புவி வெப்பம் போன்ற காரணங்களால் கரையோர கடல் வாழ் உயிரினங்கள் பெருமளவில் பாதிக்கப்படுவதாக கூறப்படும் நிலையில்,பேனல்கள் பொருத்தப்பட்ட இடங்களில் மற்ற இடங்களை விட 30 முதல் 40 சதவீத அதிக உயிரினங்கள் காணப்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments