தெற்கு சீனாவின் ஹாய்னன் மாகாணத்தில் பெய்த கனமழையால் வெள்ளம்

0 1961

தெற்கு சீனாவின் ஹாய்னன் மாகாணத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியவர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். 

டியான்ஜின் கிராமத்தில் பெய்த கன மழையால் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியதுடன் 60-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. ஒன்றரை மீட்டர் உயரத்திற்கு மேல் வெள்ள நீர் தேங்கியுள்ள நிலையில், தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட வீரர்கள் 31 பேரை படகு மூலம் மீட்டனர்.

உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  ஹாய்னன் மாகாணத்தில் மேலும் சில நாட்களுக்கு கனமழை தொடர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments