பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனால் கலந்து விற்கும் இந்தியாவின் இலக்கால் ஏழை மக்கள் பாதிக்கப்படுவர்... வல்லுநர்கள் கருத்து

0 7737

பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனால் கலந்து விற்கும் இந்தியாவின் இலக்கால் ஏழை மக்கள் பாதிக்கப்படுவர் என வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

பெட்ரோலிய இறக்குமதியையும் காற்றுமாசுபாட்டையும் குறைத்து, விவசாயிகளின் வருமானத்தை அதிகப்படுத்தும் வகையில் 2025ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனால் கலந்து விற்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இதற்காக எத்தனால் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு உடனடியாக உரிமங்களை வழங்கவும், பொதுவழங்கலுக்கான அரிசி, சோளம், சர்க்கரை ஆகியவறின் ஒருபகுதியை எத்தனால் தயாரிப்புக்கு வழங்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.

இதனால் உணவுப் பாதுகாப்பு கேள்விக்குறியாகி ஏழை மக்கள் பாதிக்கப்படுவர் என இந்தியாவின் உயிரித் தொழில்நுட்பத்தை வடிவமைக்க உதவியவரும் அமெரிக்காவின் மேரிலேண்ட் பல்கலைக்கழக வேளாண் உயிரித் தொழில்நுட்ப அறிவியலாளருமான சாந்து சாந்தாராம் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments