கர்நாடகவில் சம்பளம் கேட்டு தகராறு செய்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு...!

0 1766

கர்நாடக மாநிலம் மங்களூருவில் சம்பளம் கேட்டு தகராறு செய்தவர்களை தந்தை துப்பாக்கியால் சுட்டதில் குறி தவறி மகன் மீது குண்டு பாய்ந்தது.

பாண்டேஸ்வர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மோர்கன்ஸ்கேட் பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ் பிரபு என்பவர் பார்சல் மற்றும் டிரான்ஸ்போர்ட் அலுவலகம் நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களாக ராஜேஸ் பிரபு தன்னிடம் வேலை செய்து வரும் டிரைவர்கள், கிளீனர்களுக்கு சரியாக சம்பளம் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் நேற்று மாலை அங்கு வந்த ஒரு டிரைவரும், கிளீனரும் ராஜேஷ் பிரபுவின் மகன் சுதீந்திராவைத் தாக்கியுள்ளனர். இதனால் கோபமுற்ற ராஜேஷ், தனது கைத்துப்பாக்கியால் அவர்களை நோக்கிச் சுட்டபோது, தோட்டா குறி தவறி சுதீந்திராவின் தலையைத் துளைத்தது. இதில் படுகாயமடைந்த சுதீந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments