சொகுசுக் கப்பலில் போதைப் பார்ட்டி - தொடரும் விசாரணை...!

0 1938

மும்பை அருகே சொகுசுக் கப்பலில் போதைப் பொருள் பார்ட்டி தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது

.நடிகர் ஷாருக்கானின் மகன் உள்பட 8 பேரை முதலில் கைது செய்த போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் நேற்று மேலும் 4 பேரை கைது செய்தனர். அவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் இரவிலும் கைது நடவடிக்கை தொடர்ந்தது.

2 பெண்கள் உள்பட மேலும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.போதைப் பொருள்கள் கடலில் வீசப்பட்டிருக்கலாம் என்பதால் கடலில் தேடும் பணியில் நீர்மூழ்கி வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments