ஜம்மு காஷ்மீருக்கு செல்ல அமித்ஷா திட்டம்...!

0 2113

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டதற்குப் பிறகு முதன் முறையாக உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த மாத இறுதியில் காஷ்மீர் செல்ல உள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டட பின், அங்கு மத்திய அரசு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அறிவித்தது. இந்நிலையில் வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்யவும் எல்லையில் தீவிரவாத ஊடுருவல் போன்றவற்றை ஆராயவும் அமித் ஷா காஷ்மீர் செல்ல திட்டமிட்டுள்ளார்.

டெல்லியில் ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்டவர்களுடன் சட்டம் ஒழுங்கு நிலையைக் குறித்து அமித்ஷா அண்மையில் ஆலோசனை நடத்தியுள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments