தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம்

0 15361

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அம்மையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், நீலகிரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இடி,மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

தமிழகத்தில் அடுத்த 10 நாட்களுக்குள் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்தியகூறுகள் உள்ளது என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments