ஜம்மு காஷ்மீரில் மூன்று இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்திய தீவிரவாதிகள் - அப்பாவி மக்கள் 3 பேர் சுட்டுக் கொலை...!

0 1141

காஷ்மீரில் ஒரு சில மணி நேரத்தில் நடைபெற்ற வெவ்வேறு தீவிரவாத தாக்குதல்களில் மருந்தக உரிமையாளர் உள்பட 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஸ்ரீநகரில் பிரபல மருந்தக உரிமையாளரும், காஷ்மீரி பண்டிதருமான மக்கன் லால் பிந்த்ரூ, அவரது கடையில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து லால் பஜார் பகுதியில் சாலையோரத்தில் உணவு விற்ற விரேந்தர் பஸ்வானும், கேப் ஓட்டுநர் முகமது ஷஃபியும் அடுத்தடுத்த நிகழ்வுகளில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் தாக்குதல் நிகழ்ந்த பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்த பாதுகாப்புப் படை, தீவிரவாதிகளை தேடும் பணியை முடுக்கி விட்டுள்ளனர்.

 



SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments