பஜ்ஜி சாப்பிட்ட தாய்- மகன் பலி..! விஷமே உணவான சோகம்

0 7484

வீட்டில் பஜ்ஜி சுட்டு சாப்பிட்ட தாய், மகன் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மகனுக்கு திருமணமாகாத ஏக்கத்தில் விஷமே உணவான விபரீதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.. 

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தின் ஹுதலி கிராமத்தைச் சேர்ந்த 53 வயதான பார்வதி என்பவர், மகன் சோமனிங்கப்பாவுடன் வசித்து வந்தார். கடந்த 2 ஆம் தேதியன்று நிலத்தில் வேலை செய்துவிட்டு மாலை வீட்டுக்கு திரும்பிய தாய் பார்வதி பஜ்ஜி செய்துள்ளார். அதனை தாயும் மகனும் சேர்ந்து சாப்பிட்டுள்ளனர்.

பஜ்ஜி சாப்பிட்ட பின்னர் மயக்கமாகி வாந்தி எடுத்துள்ளனர். உடனே அவர்கள் இருவரையும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி இருவரும் திங்கட்கிழமை இரவு இறந்து விட்டனர்.

பிரேத பரிசோதனைக்கு பின்னர் இவர்களின் உடல்களுக்கு இறுதி சடங்கு செய்யப்பட்டது. இது குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரித்து வந்த நிலையில், இவர்கள் இருவரும் சாப்பிட்ட பஜ்ஜியில் விஷம் கலந்திருப்பதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

அக்கம்பக்கத்து வீட்டில் உள்ளோரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பார்வதி உறவினர்கள் ஆதரவின்றி இருந்ததாகவும், மகன் சோமனிங்கப்பாவுக்கு 28 வயதாகியும் திருமணத்துக்குப் பெண் கிடைக்காத ஏக்கத்தில் அவர் இருந்ததும் தெரியவந்ததால், அதன் காரணமாக பஜ்ஜி மாவில் விஷம் கலந்து பஜ்ஜி சுட்டு சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments