9 மாவட்டங்களில் இன்று ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்க இருப்பதால் பாதுகாப்பு பணியில் 20 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்....!

0 1910

காஞ்சிபுரம், செங்கல்பட்டு உட்பட 9 மாவட்டங்களில் இன்று ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 20 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு முதல்கட்டத் தேர்தல் இன்று நடக்கிறது.

தேர்தல் அமைதியாக நடைபெற 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான 27,ஆயிரத்து இரண்டு பதவியிடங்களுக்கு 80 ஆயிரத்து 819 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இத்தேர்தலில் 7 முனை போட்டி நிலவுகிறது. இதுதவிர, சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை தொடர்ந்து நடைபெறும். இதில், கடைசி ஒரு மணி நேரம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிப்பார்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments