வரலாற்றில் முதன் முறையாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் படப்பிடிப்பு நடத்த உள்ள ரஷ்ய படக்குழு...!

0 2287
வரலாற்றில் முதன் முறையாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் படப்பிடிப்பு நடத்த உள்ள ரஷ்ய படக்குழு

திரைப்பட வரலாற்றில் முதன் முறையாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் ரஷ்யப் படக்குழுவினர் படப்பிடிப்பு நடத்த உள்ளனர். கஜகஸ்தானின் பைக்கானுரில் இருந்து சோயூஸ் எம்.எஸ்-19 விண்கலம் மூலம் படக்குழுவினர் விண்வெளிக்கு புறப்பட்டனர்.

2 விண்வெளி வீரர்கள், படத்தின் இயக்குநர், நடிகை யூலியா ஆகியோர் விண்வெளிக்கு பயணித்தனர். "The challenge" எனப் பெயரிடப்பட்டுள்ள அப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது. சுமார் 12 நாட்கள் விண்வெளி பயணத்தை முடித்துவிட்டு வரும் 16ம் தேதி படக்குழுவினர் பூமி திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாசா மற்றும் ஸ்பேஸ்-எக்ஸ் உடன் இணைந்து படப்பிடிப்புக்காக பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் விண்வெளி செல்ல திட்டமிட்ட நிலையில், ரஷ்ய குழு விண்வெளிக்கு புறப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments