அரைடவுசர் அரசியல் அரிவாள் தூக்கிய பஞ்சாயத்து கைது..!

0 2873

ருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் அரை டிரவுசரோடு, கையில் அரிவாளுடன், பெண்களிடம் ஆபாசமாக பேசும் வீடியோ வெளியானதை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். 

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே அண்ணாமலை அள்ளி கிராமத்தை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் இளங்கோ.  முன்னாள் பஞ்சாயத்து தலைவரான 52 வயதான இளங்கோ அவருடைய அண்னன் விஸ்வநாதனுக்கு சொந்தமான தென்னந்தோப்பை பராமரித்து தேங்காய் பறித்து வந்ததாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் விஸ்வநாதனின் மகள் நிஷா, சித்தப்பா இளங்கோவிடம் எங்களுக்கு சொந்தமான தென்னந்தோப்பில் இனி தேங்காய் பறிக்க கூடாது என கூறியதாகவும் அதனை மீறி இளங்கோ தேங்காய் பறித்து விற்று வந்ததாக கூறப்படுகின்றது.

இதனையடுத்து, இளநீர் திருடுவது குறித்து நிஷா தட்டி கேட்டதால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றி ஆத்திரமடைந்த இளங்கோ தனது இரு சக்கர வாகனத்தில் இருந்து அரிவாளை கையில் எடுத்து அருகில் நின்ற கையாளிடம் கொடுத்து நிஷாவை வெட்டுமாறு கூறியுள்ளார். இதனை நிஷா வீடியோவாக பதிவு செய்தார்

இதையடுத்து ஆபாசமாக பேசி நிஷாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த இளங்கோ ஒரு கட்டத்தில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்த தனது அண்ணன் மகள் நிஷாவின் முன்பு வேட்டியை கழற்றிவிட்டு அரை டிரவுசருடன் நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த வீடியோ காட்சிகளை ஆதாரமாக கொண்டு, நிஷா பாலக்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து இளங்கோவை பிடித்து விசாரித்த போலீசார், கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அம்பத்தூரில் போக்குவரத்து காவலர்... விண்ணமங்கத்தில் சிங்கிள் பேக் சிறுத்தை... வரிசையில், தற்போது இளநீர் திருடியதோடு வலியச்சென்று அரைடிரவுசருடன் வம்பிழுத்ததால் பஞ்சாயத்து கம்பி எண்ணி வருகின்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments