தடையை மீறி கடலில் குளிக்கச் செல்வதால் தொடரும் சோகம் : ஆக.23 ஆம் தேதி முதல் மெரினா கடலில் மூழ்கி 11 பேர் உயிரிழப்பு

0 2282

மெரினா கடற்கரையில் மக்கள் கூட அனுமதிக்கப்பட்டதில் இருந்து தடையை மீறி கடலில் குளித்த 11 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

ஊரடங்கு தளர்வுகளை முன்னிட்டு, ஆகஸ்ட் 23-ம் தேதி மக்கள் மெரினா கடற்கரைக்கு செல்ல அனுமதிக்கப்பட்ட முதல் நாளே 3 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.

கடந்த மூன்று நாட்களாக தினமும் மெரினா கடலில் மூழ்கி இளைஞர்கள் உயிரிழந்து வருகின்றனர். இதில், சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த சரவணன் மற்றும் தெலங்கானாவைச் சேர்ந்த சாய் ஆகியோரின் உடல்கள் கரை ஒதுங்கின.

உயிரிழப்புகளைத் தடுக்க சென்னை மாநகராட்சி மற்றும் காவல்துறை இணைந்து சிறப்பு குழு அமைக்க திட்டமிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments