கோயில்களில் மொட்டை போடும் பணியாளர்களுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகை, வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்

0 2114

ந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களில் மொட்டை போடும் பணியாளர்களுக்கு மாதந்தோறும் தலா 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை வேப்பேரியிலுள்ள பி.கே.என். அரங்கத்தில், திட்டத்தை தொடங்கி வைத்ததின் அடையாளமாக 25 கோவில் பணியாளர்களுக்கு முதலமைச்சர் ஊக்கத்தொகையை வழங்கினார்.

மொத்தம் 349 கோவில்களில் பணிபுரியும் 1,744 பணியாளர்களுக்கு மாத ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளது. இந்த திட்டத்திற்காக ஆண்டுக்கு 10 கோடியே 47லட்சம் ரூபாய் செலவிடப்படவுள்ளது.

முன்னதாக, விழா மேடையில் வைக்கப்பட்டிருந்த வள்ளலாரின் திருவுருவப் படத்துக்கு முதலமைச்சர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து கோவில் குருமார்கள் திருமந்திரங்கள் முழங்க, முதலமைச்சருக்கு பிரசாதம் வழங்கினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments