இவரு புல்லாங்குழலை இசைத்தால்தான் அவரு குளிப்பாராம்... ஆயில் மசாஜ் ஆபீசர்..!

0 3536

துரை ஆயுதப்படை உதவி ஆணையர் ஒருவர் ஆயில் மசாஜ் செய்து கொண்டு தனது ஆடர்லியான காவலரை புல்லாங்குழல் ஊதச்சொல்லி மெய்மறந்து ரசிக்கும் வீடியோ வெளியான நிலையில் அவரிடம் துறை ரீதியான விசாரணை நடந்து வருகின்றது. 

80 களில் இளையராஜாவின் இசையில் வெளிவந்த பாடலுக்கு போலீஸ் சீருடையுடன் வயோதிக மைக் மோகன் போல முக பாவனையுடன் டிக்டாக் செய்யும் இவர் தான் மதுரை ஆயுதப்படை துணை காவல் ஆணையர் சோமசுந்தரம்.

மதுரை மாநகர் ஆயுதப்படையில் கடந்த ஆண்டு ஓய்வு பெற வேண்டியவருக்கு கூடுதலாக பணிக்காலம் நீட்டிக்கப்பட்டதால் காவல் துணை ஆணையராக தற்போது பணியில் இருந்துவரும் சோமசுந்தரம் மனைவி குழந்தைகளை பிரிந்து தனிமையில் வசித்து வருவதாக கூறப்படுகின்றது.

இசைப்பிரியரான சோமசுந்தரம், வார இறுதி நாட்களில் மதுவால் சுதி ஏற்றிக் கொண்டும் , ஆயில் மசாஜ் செய்து கொண்டும் தனது ஆடர்லியாக உள்ள காவலரை புல்லாங்குழல் இசைக்க சொல்லி ரசித்து கேட்டு அலப்பறை செய்வதை வழக்கமாக கொண்டிருப்பதாக கூறப்படுகின்றது.

இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியானதால் சோமசுந்தரம் அதிர்ச்சிக்குள்ளானார். அவர் ஓய்வு பெற இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில் ஆயுதப்படை இசைக்குழுவில் உள்ள காவலரை அழைத்து வம்படியாக புல்லாங்குழல் வாசிக்க சொல்லி அலப்பறை செய்ததோடு, புல்லாங்குழல் இசையை கேட்டுக் கொண்டே ஆயில் மசாஜ் செய்து குளிப்பதையும் வழக்கமாக்கியது தெரியவந்துள்ளது.

இதையடுத்து இந்த விதிமீறல் குறித்து துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா தெரிவித்தார்.

கண்ணியமிக்க காவல்துறைக்கு களங்கத்தை ஏற்படுத்தும் விதமாக காவல் உயரதிகாரி சோம சுந்தரம், இது போன்று காவலர்களை தனது அடிமைகள் போல பயன்படுத்துவதும், சொந்த பணிகளில் ஈடுபடுத்தி இழிவுபடுத்துவதும் அப்பட்டமான விதிமீறல் என்பதால் சோமசுந்தரத்தின் இந்த செயலுக்கு காவலர்கள கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் காவல்துறையில் ஆடர்லி முறை ஒழிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையிலும் இது போன்ற பொறுப்பற்ற அதிகாரிகளிடம் வீட்டு வேலைகளுக்கு எடுபிடிகளாகவும் அடிமைகள் போலவும் இன்றளவும் ஆடர்லி முறை நடைமுறையில் இருப்பதற்கு இந்த காட்சிகளே சாட்சி.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments