புலி இருக்கும் இடத்தை 80 சதவீதம் உறுதி செய்த வனத்துறையினர்

0 2448

நீலகிரி மாவட்டம் சிங்காராவில் புலி இருக்கும் இடத்தை 80 சதவீதம் நெருங்கிவிட்டதாகவும், புலி இருக்கும் இடத்திற்கு அருகே பரன் மற்றும் கூண்டுகளை கொண்டு செல்லும் பணி நடைபெற்று வருவதாகவும் வனத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மசினகுடி - சிங்காரா வனப்பகுதியில் வனத்துறைக்கு போக்கு காட்டி வரும் புலியை பிடிக்கும் பணி 11ஆவது நாளாக நீடிக்கிறது. ராணா மற்றும் டைகர் என்ற இரண்டு மோப்ப நாய்கள் உதவியுடன் புலியின் கால்தடத்தை வைத்து, அது இருக்கும் இடத்தை 80 சதவீதம் அளவுக்கு கண்டறிந்து உறுதி செய்துள்ளதாகவும், திங்கட்கிழமை இரவு சிங்காரா வனப்பகுதியில் வளர்ப்பு எருமையை புலி தாக்கிக் கொன்றுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியிருக்கின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments