டேங்கர் லாரி ஓட்டுநர்களுக்குத் தட்டுப்பாடு எதிரொலி ; டேங்கர் லாரிகளை ஓட்டிச் செல்லும் ராணுவ வீரர்கள்

0 1626
டேங்கர் லாரிகளை ஓட்டிச் செல்லும் ராணுவ வீரர்கள்

இங்கிலாந்தில் டேங்கர் லாரி ஒட்டுநர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டதால், ராணுவ வீரர்கள் பெட்ரோல் டேங்கர் லாரிகளை ஓட்டிச் செல்கின்றனர்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து விலகியதால் வெளிநாட்டவரை டேங்கர் லாரி ஓட்டுநர்களாக நியமிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. ஒரு லட்சம் டேங்கர் லாரி ஓட்டுநர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டதால் பால், பெட்ரோல், மருந்து, இறைச்சி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.

பல பெட்ரோல் பங்குகளில் வாடிக்கையாளர்களுக்குள் கைகலப்பு ஏற்படும் அளவிற்கு நிலைமை மோசமானது. பெட்ரோல் தட்டுப்பாட்டை போக்க ராணுவ வீரர் வீராங்கனைகள் பெட்ரோல் பங்குகளுக்கு டேங்கர் லாரிகளில் பெட்ரோல் எடுத்துச் சென்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments