தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் தற்கொலை

0 2197
தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் தற்கொலை

செங்கல்பட்டு மாவட்டம் தாழம்பூரில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாழம்பூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த உதவி ஆய்வாளர் கௌதம், நேற்றிரவு பணி முடிந்து வழக்கம்போல் மேலக்கோட்டையூரிலுள்ள காவலர் குடியிருப்புக்கு வந்துள்ளார். காலையில் எழுந்து மனைவி கையால் காபி குடித்துவிட்டு, வேலைக்கு புறப்படுவதாக கூறி அறைக்குள் சென்ற கௌதம், தன்னை தானே தலையில் சுட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

சத்தம் கேட்டு மனைவியும், பிள்ளைகளும் சென்று பார்த்த போது கௌதம் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்தில் மாவட்ட எஸ்.பி. விஜயகுமார் ஆய்வு செய்தார். முதல்கட்ட விசாரணையில் பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments