செல்போன் விற்பனையகத்தில் மர்ம நபர்கள் கைவரிசை ; சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கொள்ளையர்களுக்கு வலைவீச்சு

0 1733
செல்போன் விற்பனையகத்தில் மர்ம நபர்கள் கைவரிசை

திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் அருகே செல்போன் விற்பனையகத்தில், மர்மநபர்கள் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான விலை உயர்ந்த செல்போன்களை திருடிச்சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள செல்போன் விற்பனையகத்தின் ஷட்டரின் பூட்டை உடைத்து, கடைக்குள் நுழைந்த மர்ம நபர்கள் இருவர், அங்கிருந்த 16 செல்போன்களை திருடிவிட்டு தப்பிச்சென்றனர்.

இது குறித்து கடை மேலாளர் சுரேஷ் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த போலீசார், சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments